எண்ணம் - நிய்யத்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கு அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. ஒருவரது ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அல்லது அவர் மணக்கவிருக்கும் ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டிருந்தால் அவரது ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டிருந்ததோ அதுவாகவே அமையும்.
(அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு. நூல்: ஸஹீஹுல் புகாரி – தமிழாக்கம் பாகம் 1 ஹதீஸ் எண்: 1 ரஹ்மத் அறக்கட்டளை)
எண்ணம் மட்டுமே எந்த ஒரு செயலுக்கும் மூலம். எண்ணத்தை சப்தமிட்டுச் சொல்வதென்பது ஒரு கட்டளையா என்று பார்க்கும்போது அவ்வாறான எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.
பிற்காலத்தில் வந்தவர்கள் இந்த எண்ணம் என்பதை தத்தமக்கு விளங்கிய விதமாக விளக்கங்களைக் கொடுத்து எண்ணத்துக்குப் பதிலாக ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான வாசகங்களை உருவாக்கினார்கள்.
வுளு செய்யும் போது வுளூவுடைய பர்ளை நிறைவேற்றுகிறேன் என்றும், தொழுகைக்கு நின்று கொண்டு இந்தத் தொழுகையை அல்லாஹ்வுக்காக கிப்லாவை முன்னோக்கி அதாவாக தொழுகிறேன் என்று இப்படி வாசகங்களை அரபியில் மனனமிட்டு சொல்லித்தான் இவ்வணக்கங்களைச் செய்ய வேண்டுமென்று சட்டம் எழுதி வைத்தார்கள்.
அவற்றுக்கான வழிகாட்டல்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து உள்ளனவா என்று கேட்டால் பதிலில்லை. ஆனால், இப்படிச் சொல்வது கட்டாய்ம என்று அடித்துச் சொல்லி மக்களை வழிகேட்டில் இட்டிச் செல்கிறார்கள்.
அப்படி இல்லாத காரணத்தினாலேயே இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருத்துக்கு மாற்றுக் கருத்து என்பது தெளிவு.
அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரு விடயத்தில் ஒரு கருத்துச் சொல்லிவிட்டால், ஒரு விடயத்தில் ஒரு முடிவு எடுத்து விட்டால் அவ்விடயத்தில் மாற்றுக் கருத்துக் கொள்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. அப்படி மாற்றுக் கருத்துக் கொள்பவர்கள் வழிகேட்டிலேயே இருப்பார்கள்.
ஆகவே, எண்ணத்தை எண்ணமாகவேயன்றி வாய்மொழியாக மாற்றுவதிலிருந்து தவிர்ந்து கொள்வோமாக!
தொடரும்…………..
குறிப்பு: அல்-குர்ஆன் மொழியாக்கம் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர்ஆன் தர்ஜுமாவிலிருந்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. அவருக்கும் பிரசுரிப்பாளர்களான மூன் பப்ளிஷர்ஸ்களுக்கும் நன்றி.
No comments:
Post a Comment